கிரைம்தூத்துக்குடி

சாத்தான்குளம் கொலை வழக்கு – சூடு பிடித்துள்ளது விசாரணை

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், மேலும் 3 காவலர்களை விசாரிக்க சிபிஐக்கு, மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை நீதிமன்ற காவலில் எடுத்து, சம்பவ இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டது. பின்னர், அவர்களின் வாக்குமூலத்தையும் அதிகாரிகள் பதிவு செய்தனர்.

இந்தநிலையில், சிறையில் உள்ள மேலும் 3 காவலர்களை விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது. அதன்படி, காவலர்கள் செல்லதுரை, சாமதுரை, வெயிலுமுத்து ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்கக்கோரி, மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 போலீசாரையும், வரும் 23 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் தந்தை, மகன் கொலை வழக்கு சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

Related Articles

4 Comments

  1. Good day! This is kind of off topic but I need some help from an established blog. Is it difficult to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty fast. I’m thinking about creating my own but I’m not sure where to start. Do you have any points or suggestions? Cheers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button