அரசியல்

ஷாக் அடிப்பது மின்சாரமா? அல்லது மின்கட்டணமா? – மு.க.ஸ்டாலின்

ஷாக் அடிப்பது மின்சாரமா? அல்லது மின்கட்டணமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய அவர், கொரோனா தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வந்திருக்கின்ற மின்கட்டணத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என கூறினார்.

மின் கட்டணத்தைப் பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் உள்ளது என கூறிய அவர், பொதுமக்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்தார். ரீடிங் எடுத்ததிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக கூறிய அவர், மக்களுக்கு சலுகை தர அரசுக்கு பணமில்லையா? அல்லது மனமில்லையா? என கேள்வி எழுப்பினார்.

கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டணச் சலுகை கொடுத்துள்ளதாகவும், தமிழக அரசால் ஏன் முடியவில்லை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் வீட்டில் முடங்கிய மக்களுக்கு அரசாங்கம் விதிக்கும் அபராதமா மின் கட்டணம்? என கூறிய அவர் தமிழக அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணம் நியாயமானது அல்ல என தெரிவித்தார்

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close