கிரைம்தமிழ்நாடு

“பேய் சாக கூப்பிடுது சாக போகிறேன்” என்று கடிதம் எழுதி கல்லூரி மாணவி தற்கொலை

பேய் சாக கூப்பிடுவதால் சாக போகிறேன் என்று கடிதம் எழுதி கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் லத்திகா.கல்லூரி மாணவியான இவர் இப்போது ஊரடங்கால் வீட்டில் இருந்துள்ளார்.கடந்த இரண்டு நாளாக யாரிடமும் சரியாக பேசாத இவர் பெற்றோர் எத்தனையோ முறை கேட்டும் எந்த பதிலையும் சொல்லவில்லை.இந்நிலையில்,இவர் தன்னுடைய ரூமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்த போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து விசாரணை செய்த போலீசார் தற்கொலை செய்யும் முன் அவர் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினர்.

அதில் ”அப்பா. அம்மா யாரோ என்னை பயமுறுத்திட்டே இருக்காங்க,நைட் நேரத்துல தூக்கம் வர்றது இல்லை.நைட் முழுக்க என்னை சாகறதுக்கு வான்னு கூப்பிடறாங்க.இதை வெளியில் யார்கிட்டயாவது சொன்னா எல்லாரையும் கொன்னுடுவேன்னு அந்த பேய் சொல்லுது.தினமும் என்னை சாக கூப்பிட்டுட்டே இருக்கு.என்னை ஏதாவது பண்ண சொல்லுதுப்பா.இல்லைனா நம்ம குடும்பத்தை அழிச்சிடுவேன்னு சொல்லுது.யாரோ உங்களை வசியம் பண்ணனும்னு நினைக்கிறாங்க.. அதனால என் பொருள், நான் பயன்படுத்திய பொருள் எதையும் வீட்டில் தயவு செய்து வைக்காதீங்க.. எல்லாம் நல்லதுக்குத்தான்.. தம்பி, தங்கச்சி, நீங்க 2 பேரும் அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கங்க… லவ் யூ மை ஃபேமிலி,” என எழுதி வைத்துள்ளார்.

இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Articles

9 Comments

  1. Thanks for sharing excellent informations. Your website is very cool. I’m impressed by the details that you’ve on this web site. It reveals how nicely you perceive this subject. Bookmarked this website page, will come back for more articles. You, my friend, ROCK! I found simply the information I already searched everywhere and simply could not come across. What an ideal website.

  2. Excellent pieces. Keep posting such kind of info on your blog.
    Im really impressed by your blog.
    Hello there, You have performed an excellent job. I will certainly digg it and personally recommend to my friends.
    I’m confident they will be benefited from this
    site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button