இந்தியாபொழுதுபோக்கு

காதலியை பார்க்க கூகிள் மேப் மூலம் பாகிஸ்தான் சென்ற நபர்

கூகிள் மேப் மூலம் காதலியை பார்க்க பாகிஸ்தான் சென்ற நபரை எல்லை பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகிறார்கள்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர்,தனது மகன் சித்திக் மொஹம்மத்தை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார்.இப்புகாரின் மேல் விசாரணை நடத்திய போலீசார் மொஹம்மதின் மொபைல் போனை வைத்து அவர் இருக்கும் இடத்தை தேடினர்.

அப்போது இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர பகுதியான டொலவிரா கிராமத்தில் அவர் இருப்பதாக போலீசார் கண்டுபிடித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த மகாராஷ்டிரா மாநில போலீசார் குஜராத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

அதன் படி அவரை தேடிய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் எல்லைக்கு சில கிலோமீட்டருக்கு முன்னதாக இருக்கும் ரன் என்ற பகுதியில் சோர்வடைந்து சுய நினைவுயின்றி இருந்துள்ளார்.

அவரை மீட்டு பாதுகாப்பு முகாமுக்கு அழைத்து வந்த வீரர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர் .இதில் அவர் கூறிய சம்பவம் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் தனது ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான சம்ரா என்னும் பாகிஸ்தான் பெண்ணை காதலிப்பதாகவும், இவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் வசித்து வருவதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.இவரை பார்க்க தான் பாகிஸ்தான் செல்ல கூகுள் மேப் உதவியினால் இங்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

அவருக்கு எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு படையினர் அவர் வேறு காரணத்துக்காக சென்றாரா என்பதை குறித்தும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Articles

10 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button