விளையாட்டு

இங்கிலாந்து விண்டிஸ் டெஸ்ட் போட்டி – ஸ்டோக்ஸ்,சிப்லி அபார சதம்

இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் டிக்ளேர் செய்தது.

முதல் நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து அணி,நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் சிப்லி இணை நிதானமாகவும் சிறப்பாகவும் ஆடியது.மெல்ல மெல்ல அணியின் ஸ்கோரை உயர்த்திய இந்த இணை இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது.தொடர்ந்து சிறப்பாக ஆடிய சிப்லி ,ஸ்டோக்ஸ் இருவரும் அடுத்தடுத்து சதம் அடிக்க, இருவரும் இணைத்து 261 ரன்கள் குவித்தனர்.சிப்லி 120 ரன்களில் சேஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க ,பின் இறங்கிய போப் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் ஸ்டோக்சுடன் ஜோடி சேர்ந்த பட்டர் இணை விரைவாக ரன்களை குவித்தனர்.அபாரமாக ஆடிய ஸ்டோக்ஸ் 176 ரன்கள் குவித்து ரோச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பிறகு பின்வரிசை வீரர்கள் பங்களிப்போடு இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் குவித்த போது ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக இங்கிலாந்து கேப்டன் ரூட் அறிவித்தார்.மேற்கிந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அன்றைய நாள் ஆட்டத்தின் 14 ஒவர்களை ஆட களமிறங்கிய மேற்கிந்திய அணி இங்கிலாந்து அணி கேப்டன் வியூகத்தின் படி 2ம் நாளிலேயே முதல் விக்கெட்டை இழந்தது.சாம் கர்ரான் பந்துவீச்சில் துவக்க வீரர் கேம்பெல் ஆட்டமிழந்தார்.இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் குவித்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

Related Articles

8 Comments

  1. I have been browsing online more than 3 hours as of late, but I by no means discovered any interesting article like yours. It¦s pretty value enough for me. In my opinion, if all web owners and bloggers made good content as you did, the web will probably be a lot more useful than ever before.

  2. I and also my buddies were actually studying the good tips from your web site and so at once developed a horrible feeling I had not thanked the web blog owner for those strategies. Most of the people are already totally very interested to read them and have now in reality been taking pleasure in those things. Thank you for turning out to be so thoughtful and then for settling on varieties of incredibly good useful guides millions of individuals are really desperate to discover. Our sincere regret for not expressing appreciation to earlier.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button