அரசியல்தமிழ்நாடு

விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்த பெண்ணுக்கு பாஜகவில் பதவி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை திருச்செந்தூர் கோவிலில் வைத்து கன்னத்தில் அறைந்த பெண்ணுக்கு பாஜகவில் மகளிரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி,நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளை திரட்டி டெல்லி சென்று போராடியவர் அய்யாக்கண்ணு.இவர் திருச்செந்தூர் கோவிலில் விவசாய பிரச்சனையை வைத்து மத்திய அரசை விமர்சித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வந்தார். அப்போது ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த பெண் அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் அறைந்தார்.அப்போது அது பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் சமீபத்தில் தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதில் அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்த நெல்லையம்மாள் என்பவருக்கு பாஜகவில் மகளிரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

Tags

Related Articles

7 Comments

  1. Hello, i think that i noticed you visited my website thus i got here to “return the want”.I am trying to in finding issues to improve my website!I suppose its adequate to make use of some of your ideas!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close