தமிழ்நாடுநீலகிரி

தமிழில் பேசாதீர்கள் – மத்திய அரசு அதிகாரி பேச்சால் அதிர்ச்சி !

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காட்டில் இந்திய மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொழிற்சாலைகளில் ஒன்றான கார்டைட்டு எனப்படும் புகையற்ற வெடிமருந்துத் தொழிற்சாலை இயங்குகிறது.

தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் கூட்டமைப்பு சார்பில் பொது மேலாளரான சஞ்சய் வாக்லு என்பவரிடம் மனு அளிக்கப்பட்டது.

பின் இது குறித்து பொது மேலாளர் தொழிலாளர்களை சந்தித்து பேசுகையில், மெட்ரிகுலேஷன் பள்ளி பாணியில் “தொழிலாளர்கள் யாரும் தமிழில் பேசக்கூடாது, மீறி தமிழில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழில் பேசினால் நான் இக்கூட்டத்தை புறக்கணிப்பேன்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனை கண்டித்து  ‘தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் எதற்காக பேசக்கூடாது? மேலும் மொழி பெயர்ப்பாளர் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு வந்தது மேலாளரின் தவறு’ என்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் பொது மேலாளரின் மேல் புகார் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில் கூட்டமைப்பை சார்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆகியோர் கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது மேலாளர் பேசிய வார்த்தைகளை திரும்ப பெறாவிட்டால் அனைத்து கட்சியினரையும் அழைத்து மாபெரும் போராட்டம் செய்வாதாக தொழில் கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர்.

பல்வேறு துறைகளில் மத்திய அரசு தமிழையும் தமிழர்களையும் புறக்கணித்து வருகின்றனர் என்ற குற்றசாட்டு எழுந்துவரும் நிலையில் இச்சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

13 Comments

  1. Thanks , I’ve recently been searching for information approximately this subject for a while and yours is the best I have discovered so far. However, what in regards to the bottom line? Are you positive concerning the source?

  2. Hey, I think your blog might be having browser compatibility issues. When I look at your blog in Chrome, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, great blog!

  3. Heya i am for the first time here. I came across this board and I find It really
    useful & it helped me out a lot. I hope to give
    something back and help others like you aided me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button