Scoop Newsஇந்தியாகவர் ஸ்டோரி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது. இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் சுமார் 35 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுக்குப் பின் இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் சராசரியாக 30 ஆயிரம் பேர் என்ற அளவில் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 956 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 687 உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 25 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது. 3 லட்சத்து 42 ஆயிரத்து 473 பேர், தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 6லட்சத்து 35 ஆயிரத்து 757 பேர், கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 281 பேர், கொரோனா தொற்று பாதிப்புகு ஆளாகியுள்ளனர். அங்கு மட்டும் 11 ஆயிரத்து 194 பேர், கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close