இந்தியாகவர் ஸ்டோரி

ஜனநாயக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் – பிரதமர் மோடி

இந்திய, ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்

இந்திய, ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான 15-வது உச்சி மாநாடு, கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு காணொலி காட்சி வழியாக நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ஐரோப்பிய யூனியனுடனான உறவை மேம்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பிந்தைய சூழலில் ஜனநாயக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் என கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, உலகளவில் பொருளாதார ரீதியில் புதிய சவால்கள் காத்திருக்கின்றன என்றும், இதில் தீர்வு காண்பதற்கு ஜனநாயக நாடுகள் கட்டாயம் ஓரணியில் திரள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close