தமிழ்நாடு

இ-சஞ்சீவனிஓபிடி திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 6,471பேர் பலனடைந்துள்ளனர்-அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் புறநோயாளிகள் வசதிக்காக தொடங்கப்பட்ட இ-சஞ்சீவனிஓபிடி திட்டத்தின் மூலம் இதுவரை 6 ஆயிரத்து 471 பேர் பலனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா நோய்த் தொற்று ஏற்படுத்தி உள்ள சவாலான சூழ்நிலையால், பொதுமக்கள் மருத்துவர்களை நேரடியாக சந்திக்க இயலாத நிலையை கருத்தில் கொண்டு இ-சஞ்சீவனிஓபிடி திட்டம் தொடங்கப்பட்டதை சுட்டிக் காட்டினார்.

இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்கள் வீட்டில் இருந்துக்கொண்டே இந்த திட்டத்தின் மூலம் பலன் அடையலாம் எனவும் அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சேவையை பயன்படுத்த இ-சஞ்சீவனிஓபிடி (esanjeevaniopd) என்ற செயலி மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ தங்களது தொலைபேசி எண்ணை பதிவு செய்து தங்கள் கைப்பேசிக்கு வரும் கடவு எண்ணை பயன்படுத்தி மருத்துவரை சந்திப்பதற்கான சீட்டு எண்ணை பெறலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருத்துவரை ஆலோசித்த பிறகு மருந்து சீட்டு அவரவர் கைப்பேசிக்கே அனுப்பி வைக்கப்படும் என்றும் அதனைக் கொண்டு அருகில் உள்ள அரசு மருத்தகங்கள் அல்லது தனியார் மருந்தகங்களில் மருந்துகள் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

ஆன்லைன் மருத்துவ சேவையில் தற்போது 617 மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், அடுத்தக்கட்டமாக அரசு சிறப்பு மருத்துவர்களும், உயர் சிறப்பு மருத்துவர்களும் இச்சேவையை வழங்க உள்ளதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை 6 ஆயிரத்து 471 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பயனாளிகள் இந்த சேவையால் பலனடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

13 Comments

  1. You can certainly see your expertise within the paintings you write. The arena hopes for more passionate writers like you who are not afraid to say how they believe. At all times follow your heart.

Leave a Reply to ปั้มไลค์ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button