அரசியல்இந்தியா

அடக்குமுறையை ஏவும் யோகி அரசு – மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டு!

சிவில் உரிமைகளை கேலிக்குள்ளாக்குவது மற்றும் உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு முறையை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக இணையதள கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது,

அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான மற்றும் பாரபட்சமான குடியுரிமை (திருத்த) சட்டம்-2019 (சிஏஏ) நிறைவேற்றப்பட்ட பின்னர், மத்திய அரசும், பாஜக ஆட்சி செய்த மாநில அரசுகளும் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக போராட்டங்களை கொடூரமான முறையில் ஒடுக்கின. நமது தேசத்தின் அடிப்படை நெறிமுறைகளை அவை மீறியுள்ளன. உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த பிரச்சினையை வகுப்புவாதமாக்கியதுடன், காவல்துறை மற்றும் வலதுசாரி குண்டர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தையும், சுட்டுத் தள்ளவும், சொத்துகளை சேதம் விளைவிக்கவும், ஜனநாயக வழியில் போராடும் மக்களை துன்புறுத்தவும் முழு அதிகாரம் வழங்கியுள்ளார்.

தற்போது மாநிலத்தில் அரசுக்கு எதிராக உள்ள அனைத்து தரப்பினரையும் பழிவாங்க பொது முடக்கம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் அப்பாவி மக்கள் தினந்தோறும் காவல்துறையினரால் மிரட்டப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். கொடூரமான சட்டங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டு இட்டுக்கட்டப்பட்ட வழக்குகளில் அவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நீதிக்கு புறம்பான கொலைகள், சட்டவிரோத கைதுகள் மற்றும் அப்பாவிகளை துன்புறுத்துதல் ஆகியவை ஆபத்தான முறையில் அதிகரித்து வருகின்றன.

கான்பூர் மற்றும் உ.பி.யின் பிற இடங்களில் சில குற்றவாளிகளை அண்மையில் நீதித்துறைக்கு வெளியே தண்டனை நிறைவேற்றியதை உச்சநீதிமன்றம் கண்காணித்து நீதி விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகியது.

கலவரக்காரர்கள் என்று அவதூறு பரப்பி உ.பி. காவல்துறை செயற்பாட்டாளர்களுக்கு எதிராக கைது வேட்டை நடத்தி வருகிறது. காவல்துறையின் கொடூரமான அடக்குமுறையை நியாயப்படுத்த உண்மையான மக்களின் எதிர் குரல்கள் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றன. அண்மையில், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பிய அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக (ஏ.எம்.யூ) மாணவ-செயல்பாட்டாளர் ஷர்ஜீல் உஸ்மானி இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பாரபட்சமான CAA-NRC-NPR க்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது வன்முறை நிகழ்த்திய உ.பி காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டித்து பதவியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதித்துறை விசாரணையை நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்த காரணத்தால் பாப்புலர் ஃப்ரண்டின் உ.பி. மாநில தற்காலிக குழு உறுப்பினர் முஃப்தி முஹம்மது ஷஹ்ஜாத் கைது செய்யப்பட்டார்.
மேலும் டாக்டர் கபீல் கான் கைது செய்யப்பட்டிருப்பது தெளிவான அரசியல் பழிவாங்கும் செயலாகும். பாஜக அரசு அவரது வாழ்க்கையை அழிக்க கிடைக்கக்கூடிய எல்லா வழிகளையும் பயன்படுத்துகிறது. இதுபோன்ற பல செயல்பாட்டாளர்கள் போலி குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் (என்எஸ்ஏ) போன்ற கடுமையான சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உத்தரபிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1986 , மற்றும் உபி குண்டர்கள் தடுப்பு சட்டம், 1970 ஆகியவை செயல்பாட்டாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவது முரணாகும். பிறந்த நாட்டில் வாழ்வதற்கான உரிமைக்காக ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் மீது இத்தகைய சட்டங்கள் பதியப்படும் அதே வேளையில் குண்டர்கள் மற்றும் சமூக விரோத சக்திகள் வழக்குகள் மற்றும் தண்டனையின்றி மாநிலம் முழுவதும் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். இது தவிர, ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றும் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் மீது மீண்டும் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

CAA எதிர்ப்பு போராட்டங்களின் போது பழிவாங்கும் விதமாக இழப்பீடு என்ற போர்வையில் உ.பி. நிர்வாகம் இப்போது போராடிய மக்களின் சொத்துக்களை கைப்பற்றும் ஒரு புதிய கொடூரமான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. கலவர வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி யார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம் மற்றும் அவர்களின் சொத்துக்களை இணைக்கலாம் என்ற நிலை உள்ளது. தனிநபர்களை சிறையில் அடைப்பதன் மூலம் அவர்களை அழிப்பது மட்டுமல்லாமல் சொத்துக்களை பறிப்பது ஒரு புதிய உத்தி; சொத்துகளை பறிப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக சேதப்படுத்தலாம். மாநில அரசு, இத்தகைய ஜனநாயகத்திற்கு விரோதமான மற்றும் வன்முறை நடவடிக்கைகளின் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து வகையான எதிர்ப்பையும் அகற்ற முயல்கிறது. மாநிலத்தின் முன்னணி எதிர்க்கட்சிகள் இந்த விஷயங்களில் மௌனமாக இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது, இந்த நடவடிக்கைகளை தங்கு தடையின்றி செயல்படுத்த மாநில அரசுக்கு எதிர்கட்சிகளின் மௌனம் வாய்ப்பாக உள்ளது.

இந்த கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பு உ.பி. அரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கிறது. வகுப்புவாத அரசியலை நிராகரிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் உத்தரபிரதேசத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதனுடன், சிவில் சமூகமும், அரசியலமைப்பு விழுமியங்களை நம்பும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அமைதியான வழியில் இதற்கு எதிராக செயல்பட வேண்டும் . உத்தர பிரதேசத்தில் அரசு ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையான சட்ட மற்றும் ஜனநாயக ஆதரவை வழங்குவது நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள்

1. ரவி நாயர்,
இயக்குநர்,
தெற்காசிய மனித உரிமைகள் ஆவண மையம் (SAHRDC), டெல்லி

2. உபைதுல்லா கான் ஆஸ்மி , முன்னாள் எம்.பி., உத்தரபிரதேசம்

3. சீமா ஆசாத் , ஆசிரியர், தஸ்தக் இதழ், அலகாபாத்

4. வழக்கறிஞர். ஷர்ஃபுதீன் அகமது , தேசிய துணைத் தலைவர், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ)

5. வழக்கறிஞர். கே.கே.ராய் ,
அலகாபாத் உயர் நீதிமன்றம்

6. இ.எம். அப்துல் ரஹ்மான் ,
தேசிய துணைத் தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

7. ராஜீவ் யாதவ், பொதுச் செயலாளர், ரிஹாய் மன்ச், உத்தர பிரதேசம்

8. வழக்கறிஞர். ஏ. முகமது யூசுப் , தேசிய செயலாளர், மனித உரிமைகள் அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (NCHRO

Related Articles

24 Comments

 1. It is the best time to make some plans for the future and it is time to be happy.

  I have read this post and if I could I wish to suggest you some
  interesting things or advice. Maybe you can write next articles referring to this article.
  I desire to read even more things about it!

 2. Hi, I do believe this is a great website. I stumbledupon it 😉
  I may return once again since i have saved as a favorite
  it. Money and freedom is the greatest way to change, may you be
  rich and continue to help other people.

 3. I will right away take hold of your rss feed as I
  can’t find your email subscription link or newsletter service.
  Do you have any? Kindly let me recognize in order that I could subscribe.

  Thanks.

 4. Please let me know if you’re looking for a author for your weblog.
  You have some really great posts and I think I would be a good asset.

  If you ever want to take some of the load off, I’d
  really like to write some material for your blog in exchange
  for a link back to mine. Please shoot me an e-mail if interested.
  Thanks! cheap flights 31muvXS

 5. Hi, I do think this is an excellent website. I stumbledupon it 😉 I am going
  to revisit once again since I book-marked it.

  Money and freedom is the best way to change, may you be rich and continue to help
  others.

 6. That is very interesting, You are an excessively skilled blogger.
  I’ve joined your feed and look forward to looking for more of your wonderful post.
  Also, I’ve shared your web site in my social networks

 7. Greetings I am so excited I found your site, I really found you by error, while I was researching on Yahoo for something else, Anyhow I am here now and would just like to say thanks a lot for a
  marvelous post and a all round entertaining blog (I
  also love the theme/design), I don’t have time to browse
  it all at the moment but I have saved it and also included your RSS feeds, so when I have time I will be back to read more, Please do keep up the awesome b.

 8. Attractive section of content. I just stumbled upon your website and in accession capital to assert that I acquire actually enjoyed account your blog posts. Any way I’ll be subscribing to your feeds and even I achievement you access consistently quickly.

 9. Hey fantastic website! Does running a blog similar to this take a lot of work?
  I’ve very little knowledge of coding however I was hoping to start my own blog in the
  near future. Anyhow, should you have any recommendations or tips for new blog
  owners please share. I understand this is off subject nevertheless I simply had to
  ask. Many thanks!

Leave a Reply to large notebook paper size Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button