சேலம்தமிழ்நாடு

ரூ.33 கோடி மதிப்பிலான மேம்பாலம் இன்று திறப்பு

சேலம் கந்தம்பட்டியில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் 33 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இந்தப் பணிகள் வேகமாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளன.
120 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டு இருக்கிறது.

இந்த பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் செல்லும் அவர், அங்கு பாலத்தை திறந்து வைக்கிறார்.

புதிதாக திறக்கப்படவுள்ள இந்த பாலம் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த கந்தம்பட்டி பைபாசில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் திறக்கப்பட்டதும் விவசாயிகள், வெள்ளி தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்கள், வாகன ஓட்டிகள் என பலரும் பெரிதும் பயனடைவார்கள் என சேலம் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close