அரசியல்இந்தியா

ராஜஸ்தானில் உச்சகட்ட அரசியல் குழப்பத்தில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம்..!

ராஜஸ்தானில் உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில பாஜக சார்பில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

மத்தியப்பிரதேசத்தைப் போல், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி, துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் புயலைக் கிளப்பினார். ஆனால், தங்களிடம் 109 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகக் கூறிய முதலமைச்சர் அசோக் கெலாட் தரப்பு கூறியது.

இதை அடுத்து துணை முதலமைச்சர் மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். இது பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று மாநில பாஜகவின் ஆலோசனைக் கூட்டம் 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ல உள்கட்சி பூசல் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், சச்சின் பைலட்டும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அவருடன் சேர்ந்து, பதவி நீக்கம் செயப்பட்ட இரு மாஜி அமைச்சர்களும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். தன்னுடன் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய சச்சின் பைலட் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு ராஜினாமா செய்யும் பட்சத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்பதால், உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close