இந்தியாமொபைல்

முழுமையான இந்திய தொழில்நுட்பங்களுடன் வரப்போகும் JIO 5ஜி!

இந்திய அளவில் தொலை தொடர்பு சேவையில் முதலிடத்தில் உள்ள ஜியோ நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குட்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே!

ஜூலை 15 ஆம் தேதி, இன்று நடந்த ரிலையன்ஸ் 2020 வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வெளியான தகவலின் படி, கூகுள் நிறுவனமானது ரூ 33.737 கோடி முதலீடு செய்து ஜியோ வின் 7.7% பங்குகளை எடுத்துக்கொள்ளும். அதுமட்டுமின்றி ஜியோ TV பிளஸ், ஜியோ க்ளாஸ், போன்றவையும் அறிமுகபடுத்தப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஜியோ 5 ஜி தொடர்பான விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

Reliance Jio's 5G plans and much more

ஜியோ நிறுவனத்தின் நிறுவுனர் முகேஷ் அம்பானி கூறியதாவது, ஜியோ 5ஜி முழுக்க முழுக்க புதிதாக உருவாக்கப்பட உள்ளது. மேலும் இது உலக தரம் வாய்ந்ததாகவும் அமையும் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இதுவரை பிற நாட்டின் தொழில்நுட்பம் மூலம் இயங்கி கொண்டிருந்த ஜியோ (4 ஜி) சேவை, இனி 5ஜி சேவையை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்போகிறது. இதனின் முதற்கட்ட சோதனை விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டுக்குள் வெளிவர தயாராக இருக்கும்.

அதுமட்டுமின்றி கூகுளும் மற்றும் ஜியோவும் இணைந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இயக்க முறைமையை உருவாக்கவுள்ளோம் எனவும் அறிவித்தார்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close