சினிமா

விஜயின் ‘துப்பாக்கி’ படத்தில் நடித்ததில் வெட்க படுகிறேன் – அக்ஷரா கவுடா.!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் துப்பாக்கி. இப்படத்தில் ஒரு சிறிய காட்சி மூலமாக பிரபலமடைந்த நடிகை தான் அக்ஷரா கவுடா.

‘ஸ்வேதா’ என்ற பெயரில் அவர் நடித்த சில காட்சிகள் விஜய் ரசிகர்களிடையே மறக்க முடியாத முகமாக மாறியது. அதன் பின் அஜித்தின் ஆரம்பம், ஜெயம் ரவியின் போகன் என்று மேலும் சில படங்களும் தமிழில் நடித்துள்ளார்.

தற்போது ‘சூர்ப்பனகை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் — ‘நான் இதை ஏன் செய்தேன்?’ என்று வெட்கப்படும் அளவிற்கு உள்ள படம் என்றால் அது ‘துப்பாக்கி’ படம் தான். ஆரம்பத்தில் காஜலுக்கு தோழியாக தான் நடிக்க கூப்பிட்டார்கள். நான் எதிர் பார்க்கவில்லை அது இப்படி ஒரு காட்சியாக இருக்கும் என்று!. அந்த கதாபாத்திரத்தை நினைத்து மட்டும் தான் வருத்தப்படுகிறேன். மேலும் விஜயுடன் நடித்தது எனக்கு மன ஆறுதலாக இருந்தது. இப்போதும் அவர்களுடன் சேர்ந்து வேலை பார்க்க ஆவலாக தான் இருக்கிறேன் என்றும் கூறினார்.

Related Articles

5 Comments

  1. I’m not sure where you are getting your info, but good topic. I needs to spend some time learning much more or understanding more. Thanks for great info I was looking for this information for my mission.

  2. You really make it appear really easy along with your presentation however I to find this matter to be actually one thing which I believe I’d by no means understand. It sort of feels too complex and very extensive for me. I’m having a look ahead for your next submit, I will try to get the hold of it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button