உலகம்

அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட போலீஸ் நாய்

தெலங்கானா மாநிலத்தில் மெஹபூபாபாத் காவல் தலைமையகத்தின் போலீஸ் நாய் உயரிழந்ததையடுத்து முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

லியோ என்ற பெயருடைய அந்த போலீஸ் நாய் கடந்த 10 வருடங்களாக நில கன்னிவெடிகள் மற்றும் சுரங்கங்களை கண்டறிதல் போன்ற பணிகளை வெற்றிகரமாக செய்துள்ளது.

கடந்த 2 நாட்களாக சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த லியோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

அதற்கு டிஎஸ்பி ஜனார்தன் ரெட்டி தலைமையிலான போலீசார் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button