Uncategorizedவிளையாட்டு

`4 ஆண்டுகள் ஐபிஎல்; 2023 உலகக் கோப்பை ரோடு மேப்!’- தோனி குறித்து இங்கிலாந்து ஸ்பின்னரின் லாஜிக்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியால் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் விளையாட முடியும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மாண்டி பனேசர் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின்னர் தோனி, சர்வதேசப் போட்டிகள் எதிலும் விளையாடவில்லை. அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபரில் வெளியான பிசிசிஐயின் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலிலும் தோனி பெயர் மிஸ்ஸிங். இதனால், அவர் ஓய்வை விரைவில் அறிவிக்கப் போகிறார் என்று ஏற்கெனவே பேசிக்கொண்டிருந்தவர்கள், பிசிசிஐ ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி பேசத் தொடங்கினர்.

தோனி

தோனி

ஆனால், இவை எதையும் கண்டுகொள்ளாமல் ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்து பயிற்சியைத் தொடங்கினார் தோனி. ஏறக்குறைய ஒருவார காலம் பயிற்சி போய்க்கொண்டிருந்த நிலையில், மார்ச் 2வது வாரத்தில் இந்தியாவில் கொரோனா பிரச்னை எழுந்தது. ஊரடங்கு குறித்து பேசிக்கொண்டிருந்த நிலையில், தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே வீரர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பினர். கொரோனா ஊரடங்கால் 2020 ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெறலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தோனி, ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் இடம்பிடிக்கலாம் எனப் பேசப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் வகையிலேயே பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இதையொட்டியே கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், தோனி ஏதாவது ஒருவகை கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வரும் சூழலில் அவரால் 2023ம் ஆண்டு உலகக் கோப்பையிலும் விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர்.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button