உலகம்விளையாட்டு

பயிற்சி, பென்ச், கோல் செலிபிரேஷனில்கூட ஓகே… ஆனால், களத்துக்குள் சமூக இடைவெளியென்பது?

கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் 10 வீரர்களோடு ஆடிய யுனியோன் பெர்லின் அணி, 1-1 என மெய்ன்ஸோடு டிரா செய்தது.

பயிற்சியில், பென்ச்சில் அமர்ந்திருப்பதில், கோல் செலிபிரேஷனில்கூட சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கலாம். ஆனால், களத்துக்குள்? கால்பந்துக் களத்தில் அதைப் பற்றியெல்லாம் யோசித்தே பார்க்க முடியாது என்பதை உணர்த்தியிருக்கிறது புண்டஸ்லிகாவின் இந்த வாரச் சுற்று. 39 யெல்லோ கார்டுகள், 4 ரெட் கார்டுகள் என இந்தச் சுற்றில் மட்டும், ஒன்பதே போட்டிகளில் 43 கார்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஹோஃபன்ஹெய்ம், கலோன் அணிகள் மோதிய போட்டியில் மட்டும் 7 கார்டுகள் (5 யெல்லோ + 2 ரெட்) கொடுக்கப்பட்டது. களத்துக்குள் இறங்கிய பிறகு வீரர்களைக் கட்டுப்படுத்திவிடமுடியுமா என்ன?

70 சதவிகிதம் பொசஷன் வைத்திருந்தது லெவர்குசான் அணிதான். வோல்ஸ்பெர்க் 188 பாஸ்கள் மட்டுமே செய்ய, அந்த அணி 542 பாஸ்களை கச்சிதமாக முடித்தது. கார்னர்களின் எண்ணிக்கை 12 – 6. ஆனால், அந்த பொசஷனும் பாஸ்களும் எதற்கும் பயனளிக்கவில்லை. 90 நிமிடத்தில் அவர்கள் அடித்தது 9 ஷாட்கள். அதில் டார்கெட்டை நோக்கிச் சென்றது என்னவோ ஒன்றே ஒன்றுதான். அதேசமயம், 30 சதவிகித நேரம் மட்டுமே பந்தை வசப்படுத்தியிருந்த வோல்ஸ்பெர்க், மொத்தம் 14 ஷாட்கள் அடித்தது. அதில் இலக்கை நோக்கி அடிக்கப்பட்டவை 9 ஷாட்கள்! இந்த வித்தியாசம்தான், ஷாட்களில் இருந்த துல்லியம்தான் ஆட்டத்தின் முடிவை மாற்றியது.

ஆட்டத்தை நிர்ணயித்த இன்னொரு முக்கியமான விஷயம் ஃபவுல்கள். லெவர்குசான் 10 ஃபவுல்கள் மட்டுமே செய்ய, 16 ஃபவுல்கள் செய்தது வோல்ஸ்பெர்க். குறைவான பௌல்கள் செய்திருந்தாலும், லெவர்குசான் தவறான இடங்களில் அதைச் செய்தது. ஃபைனல் தேர்டில், பாக்சுக்கு அருகில் செய்யப்பட்ட மூன்று தவறுகள், மூன்று கோல்களுக்கு வழிவகுத்தன. இரண்டு ஃப்ரீ கிக் வாய்ப்புகளை, மேக்ஸிமிலியன் ஃபிளிப்ஸ் பாக்சுக்குள் அனுப்ப, அவற்றை கோலாக்கினார் டிஃபண்டர் மரின் போங்ராசிக். ஃபிளிப்ஸ் அடித்த இன்னொரு டைரக்ட் ஃப்ரீ கிக், லெவர்குசானின் வாலில் பட்டு கோலுக்குள் நுழைந்தது. மூன்று தவறுகள், மூன்று கோல்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button