தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்றம் இடைக்கால தடை……

251

தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்கள், அவரவர் செலவில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இரண்டு வாரம் ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேகநாதன் என்பவர், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக ஐ.ஐ.டி., நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சீமைகருவேல மரங்களை வெட்ட தடை விதிக்கப்படுகிறது. மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. மே 11ம் தேதி வழக்கை ஒத்திவைத்தார்.