இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்ற தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திராவின் பின்னணி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

283

இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்ற தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திராவின் பின்னணி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயுடன் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா, உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு தான் உறவினர் எனக்கூறி பலரையும் ஏமாற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.
அவருக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 50க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பது அம்பலமாகி உள்ளது.
2013ம் ஆண்டு சென்னையில் பலரை ஏமாற்றியதாக, மெட்ராஸ் கபே என்ற இந்திப் படத்தில் நடித்த மலையாள நடிகை லீனா மரியா பால், அவரது காதல‌ன் சுகேஷ் சந்திரசேகரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அம்பத்தூர், கனரா வங்கியில் 19 கோடி ரூபாய் மோசடி, கர்நாடகாவில் அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக 65 லட்சம் மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2013 ம் ஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்ட சுகேஷ், 2015ம் ஆண்டு மும்பையில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த விவகாரத்திலும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.