மாவீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்தநாள் விழா கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

306

மாவீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்தநாள் விழா கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாவீரன் சுந்தரலிங்கத்தின் 247-வது பிறந்தநாள் விழா விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், அக்கட்சியினர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று மாவீரன் சுந்தரலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர செயலாளர் கருப்பசாமிபாண்டியன் உள்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.