தனியார் ஊடகம் தன்னை குறித்து வெறுப்பு பிரசாரம் செய்வதாக கூறி ஜாகீர் நாயக் 500 கோடி ரூபாய் கேட்டு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

263

தனியார் ஊடகம் தன்னை குறித்து வெறுப்பு பிரசாரம் செய்வதாக கூறி ஜாகீர் நாயக் 500 கோடி ரூபாய் கேட்டு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வங்காளதேச தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் தங்கியிருந்த ஓட்டலில் கடந்த 1ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சுதான் தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு, இந்திய அரசை வங்காளதேச அரசு கேட்டுக்கொண்டதால், அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதுகுறித்து பேசிய மத போதகர் ஜாகீர் நாயக், தான் எந்த வடிவிலும் ஒரு போதும் பயங்கரவாதத்தை ஆதரித்தது இல்லை என்றும், இது தொடர்பாக தன்னிடம் விளக்கம் கேட்டு இந்திய அதிகாரிகள் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். அத்துடன் தன்னை குறித்து தொடர்ந்து வெறுப்பு பிரசாரம் செய்வதாகவும் , ஊடக விசாரணை செய்வதாகவும் கூறி தனியார் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது 500 கோடி ரூபாய் கேட்டு அவதூறு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக ஜாகீர் நாயக் தெரிவித்துள்ளார்.