யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து மராட்டிய அரசு ஒப்புதல்

159

மராட்டிய மாநிலத்தில் வாழும் யூத இன மக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. அப்போது யயூத இன மக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து முதல்வர் பட்னாவிஸ், மும்பையில் செய்தியாளர்களிடம் பின்னர் கூறியதாவது-
யூத இனத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெற்று இனி பயனடைவார்கள். தங்களுக்கான கல்வி நிலையங்களையும் யூதர்கள் இனி அமைத்துக் கொள்ளலாம். முறையான அறிவிப்பு வெளியிட்ட பிறகு, மற்ற சிறுபான்மையினச் சமூத்தை சேர்ந்தவர்கள் போல் யூத இன மக்களும் அரசிடம் இருந்து அனைத்துச் சலுகைகளையும் பெறலாம்.