யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று இன்றுமுதல் தொடங்குகிறது.

165

யூரோ கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், உலக சாம்பியன் ஜெர்மனி, போட்டியை நடத்தும் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து, போலந்து உள்ளிட்ட 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில், நாக் அவுட் சுற்றில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு செயின்ட் ஈட்டியன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து – போலந்து அணிகள் மோதுகின்றன. நாக் அவுட் சுற்றில் முதல் முறையாக கால் பதித்துள்ள சிறிய அணி போலந்து ஆகும்.

இதனை தொடர்ந்து, பாரிஸ் நகரில் இரவு 9.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் வேல்ஸ் – வடக்கு அயர்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் முதன் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

லென்ஸ் நகரில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணியை, குரோஷியா அணி எதிர்கொள்கிறது.

இந்த போட்டிகளில், தோல்வியை தழுவும் அணிகள், தொடரில் இருந்து வெளியேற்றப்படும் என்பதால் இன்று நடைபெறும் ஆட்டங்களில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.