யுனான் மாகாணத்தில் உள்ள நிலச்சரிவில் வானிலை ஆய்வு மையத்தின் சுற்றுச்சுவர் சரிந்தது.

390

யுனான் மாகாணத்தில் உள்ள நிலச்சரிவில், அம்மாநிலத்தின் வானிலை ஆய்வு மைய கட்டிடத்தின் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஹூயானிங் பகுதியில் வானிலை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு தொடர் மழை பெய்து வந்ததையொட்டி, அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், வானிலை ஆய்வு மையக் கட்டிடத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பக்கம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10 கார்கள் சேதமடைந்தன. மேலும் இதில் யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசி.டிவி. கேமராவில் பதிவாகியுள்ளது.