ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தல் : ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.,க்கள் உண்ணாவிரதம் ..!

951

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, டெல்லியில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் எம்.பி.க்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.,க்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதையடுத்து, அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் எம்.பி.,க்கள் 5 பேர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் தங்களது பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, டெல்லி ஆந்திரா பவன் அருகே ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் எம்.பி.,க்கள் 5 பேரும் இன்று காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆந்திராவைச் சேர்ந்த பிறகு கட்சி எம்.பி., பிற கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களும் கலந்து கொண்டுள்ளனர். மத்திய அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர்.