யோகியின் சொத்து மதிப்பு 3 ஆண்டுகளில் 32% சதவீதம் உயர்வு!

378

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பு, கடந்த 3 ஆண்டுகளில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
உத்திர பிரதேசத்தில் மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ.க வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி வகித்து வருகிறார். கோரக்பூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக, பதவி வகித்து வரும் ஆதித்யநாத், ஆறு மாதத்திற்குள் சட்டசபை அல்லது சட்ட மேலவை உறுப்பினராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் ஆதித்யநாத் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை கடந்த 5-ஆம் தேதி அவர் தாக்கல் செய்தார். அதில், அவர் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை விட 36 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.