யோகி ஆதித்யநாத் மீதான கொலை வழக்கு தள்ளுபடி..!

248

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீதான 20 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கை சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் மஹாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் 1999-ம் ஆண்டு போலீஸ் கான்ஸ்டபிள் சத்ய பிரகாஷ் யாதவ், மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அப்போது, கோரக்பூர் எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் தூசி தட்டப்பட்டது.

இந்தக் கொலை வழக்கில் யோகி ஆதித்யநாத்துக்கு தொடர்பில்லை என்று சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் யோகி ஆதித்யநாத்தை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கியது.

எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.