இந்திய-இலங்கை அரசுகள் இணைந்து பேச வேண்டும் : இலங்கை எம்பி யோகேஸ்வரன்

391

மீனவர்கள் பிரச்சனை குறித்து, இந்திய-இலங்கை அரசுகள் இணைந்து பேசி நல்ல தீர்வு காணவேண்டும் என இலங்கை எம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மட்டக்களப்பு தொகுதி எம்பியான யோகேஸ்வரன், விநாயர் சதுர்த்தி விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றதாக தெரிவித்தார். இந்திய-இலங்கை அரசுகள் இணைந்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தினால் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண முடியும் என்று அவர் தெரிவித்தார்.