குமாரசாமி அரசுக்குத் திங்கட்கிழமையே கடைசிநாள்..!

146

குமாரசாமி அரசின் இறுதிநாள் திங்கட்கிழமையாகும் எனக் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகச் சட்டப்பேரவையில் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பை நடத்தாமல் காலங்கடத்தி வருவது குறித்து மாநில பாஜக தலைவரான எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு திங்களன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார். குமாரசாமி அரசுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதால் திங்கட்கிழமையுடன் ஆட்சி கவிழும் எனத் தெரிவித்தார். பாஜகவுக்கு 106 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகவும், தங்களை ஆட்சியமைக்க விடாமல் குமாரசாமி தாமதப்படுத்துவதாகவும் தெரிவித்தார். மும்பையில் தங்கியுள்ள எம்எல்ஏக்களைச் சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளக் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதையும் எடியூரப்பா சுட்டிக்காட்டினார்.