யமுனை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்வதால், டெல்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

278

யமுனை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்வதால், டெல்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரியானாவில் பலத்த மழை பெய்து வருவதால், யமுனை நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, யமுனை நதி பாயும் பகுதிகளில் வெள்ள நீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி அருகே வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி பாய்கிறது. எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். வடக்கு டெல்லியில் ஒரு சில பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.