அதிமுகவிலிருந்து ஒதுங்கி கொள்வதாக தினகரன் அறிவித்துள்ளது தங்களின் தர்மயுத்ததுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

468

அதிமுகவிலிருந்து ஒதுங்கி கொள்வதாக தினகரன் அறிவித்துள்ளது தங்களின் தர்மயுத்ததுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, பாண்டியராஜன், செம்மலை, அதிமுக எம்பி மைத்ரேயன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இருஅணிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார். அதிமுகவிலிருந்து ஒதுங்கி கொள்வதாக தினகரன் அறிவித்து இருப்பது தங்களின் தர்மயுத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்று அவர் கூறினார்.