உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மின்னல் வேக வீரர் ஓடுபாதையில் தவறி விழுந்ததால் அரங்கமே அதிர்ச்சியில் உரைந்தது.

233

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மின்னல் வேக வீரர் ஓடுபாதையில் தவறி விழுந்ததால் அரங்கமே அதிர்ச்சியில் உரைந்தது.
லண்டனில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பிரிட்ட அணி வெற்றி பெற்றது. இதில் ஜமைக்கா அணியில் 4வது வீரராக ஓடிய, உசைன் போல் தொடையில் ஏற்பட்ட திடீர் வலியால் கால் தவறி கீழே விழந்தார். இதனால் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதன் பின் எழுந்த போல்ட், தனது பிரத்யேக ஸ்டைலில் ரசிகர்களை உற்சாகபடுத்தி களத்தில் இருந்து வெளியேறினார்.
இதுவே அவரது கடைசி சர்வதேச ஓட்டம் ஆகும். இதன் மூலம், உலக சாதனைகள் பல படைத்த உசேன் போல்ட் 14 உலக சாம்பியன் பதக்கங்கள் மற்றும் 8 ஒலிம்பிக் பதக்கங்களுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.