உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி ஈட்டி எறிதலில் இந்திய வீரர் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

169

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தேவிந்தர் சிங் பெற்றுள்ளார்.
லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் லீக் சுற்றில், இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, தேவிந்தர் சிங் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்த்த நீரஜ் சோப்ரா தோல்வியடைந்து ஏமாற்றம் தந்தார்.
தேவிந்தர் சிங் காங் சிறப்பாக விளையாடி 82. 2 மீட்டர், 82. 14 மீட்டர் மற்றும் 84.2 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக சாம்பியன் ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.