விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடக்கம்..!

233

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்கி வரும் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை 307 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் ஒரே இந்தியரான யுகி பாம்ப்ரி முதல் சுற்றில் இத்தாலியின் தாமஸ் பாபியானோவுடன் மோதுகிறார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி உள்பட 6 இந்தியர்கள் களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு போட்டி தொடங்குகிறது.