சிரியாவில் போர் நிறுத்த உடன்பாடு. போராட்டக்காரா்கள் அரசுக்கு அழைப்பு.

224

சிரியா நாட்டில் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர், 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது . கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அலெப்போ நகரை முழுமையாக கைப்பற்ற, கடந்த ஒரு மாத காலமாக ராணுவத்தினர் தொடர்ந்து வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இதில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் அங்கிருந்து சுமார் 80 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர். இந்த போரில் அலெப்போ நகரில் உள்ள பழைய நகரம் உள்பட நான்கில் மூன்று பகுதியை சிரிய ராணுவத்திடம் கிளர்ச்சியாளர்கள் இழந்துள்ளனர். இதையடுத்து 5 நாள் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். நகரின் மீதமுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.