மலைப்பாம்பு பிடியில் சிக்கிய நாய்..!

293

தாய்லாந்தில் மலைப்பாம்பு பிடியில் சிக்கிய நாயை இளைஞர்கள் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று சாலையில் சென்ற நாயை கவ்வி பிடித்தது. இதனை கண்ட அப்பகுதிமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் வருவதற்குள் இளைஞர்கள் சிலர் மலைப்பாம்பு பிடியில் சிக்கிய நாயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.