மணிக்கு 120 பீட்சா தயாரித்து அசத்தும் ரோபோ..!

243

பிரான்சில் உள்ள ஒரு உணவகத்தில் பீட்சா தயாரிக்கும் பணியை ரோபோ ஒன்று மேற்கொண்டு வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஒரு உணவகத்தில் பீட்சா தயாரிக்கும் பணியை ரோபோ மூலம் அக்கடையின் உரிமையாளர் மேற்கொண்டு வருகிறார். வழக்கமாக தொழிற்சாலைகளில் கடினமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் இப்போது பிட்சாவில் தக்காளி சாறு பூசி அதனை ஓவனில் சமைத்து அட்டைப்பெட்டியில் போட்டு பேக்கிங் செய்யும் வேலைகளையும் செய்கிறது.

மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பீட்சாவை தேர்வு செய்வதால், அதனை துல்லியமாக அறிந்து பீட்சாவை ரோபோ தயாரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 30 விநாடிகளுக்கும் ஒரு பிட்சா வீதம், மணிக்கு 120 பிட்சாக்களை ரோபோ தயாரிக்கிறது. நிஜமான பிட்சா மாஸ்டர்களே வியக்கும் வகையில் இதன் ருசியும் அபாரமாக இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.