மகனுடன் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் ஜோர்டான் அரசர்..!

243

ஜோர்டான் அரசர் அப்துல்லா துப்பாக்கி பயிற்சி செய்யும் வீடியோ அந்நாட்டு மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஜோர்டான் நாட்டின் அரசராக உள்ள அப்துல்லா, அரசியலில் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். தனது மகனும், இளவரசருமான ஹூசைனுடன் இணைந்து அவர் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உயர் ரக துப்பாக்கியால் சுட்டவாறு அவர்கள் முன்னேறியது பார்ப்போரை ரசிக்க செய்தது. இந்த வீடியோ ஜோர்டான் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. வீடியோவை ஜோர்டன் அரசியும், அப்துல்லாவின் மனைவியுமான ரானியா தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.