உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 85 கோடியாக அதிகரிப்பு..!

340

உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஐ.நா சபை வேதனை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 85 கோடியாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், தற்போது அது அதிகரிக்க தொடங்கி உள்ளது என ஐ.நா வேதனை தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் நிலவி வரும் உள்நாட்டு போர்களால் மக்கள் பலர் அகதிகளாக்கப்பட்டு வருவதே இதற்கு முக்கிய காரணம் என ஐ.நா வின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா சபை, பத்தில் 9 நகரங்களில் வாழும் மக்கள் மாசடைந்த காற்றையே சுவாசிக்கின்றனர் என கூறியுள்ளது.