காஸா முனையில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் சிறுவன் உட்பட 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே எல்லையாக அமைந்துள்ள காஸா பகுதியில் பல ஆண்டுகளாக ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே காஸா பகுதியை சொந்தம் கொண்டாடி அவ்வபோது பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், நேற்று போராட்டம் நடத்திய பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.