ஜிகா வைரஸ் பாதிப்பு குறைவு எதிரொலி….. அவசர நிலையை திரும்ப பெற்றது உலக சுகாதார நிறுவனம்

195

ஜிகா வைரஸ் மீதான அவசர நிலை அறிவிப்பை முடிவுக்கு கொண்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், ஜிகா வைரஸ் வேகமாக பரவி வந்த காரணத்தால், உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை அறிவித்தது. இதையடுத்து கடந்த 8 மாதங்களாக ஜிகா வைரஸ் மீதான அவசர நிலை நீடித்து வந்தது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தற்பொழுது உலக அளவில் குறைந்து வருவதை அடுத்து இந்த அவசர நிலை அறிவிப்பை, முடிவுக்கு கொண்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் தொடர்ந்து ஜிகா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்றும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இன்று வரை காய்ச்சல், எபோலா, போலியோ, ஜிகா அகியவற்றின் காரணமாக மொத்தம் 4 முறை அவசர நிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.