திடீரென தீப்பிடித்து எரிந்த இ-சிகரெட்..!

390

அமெரிக்காவில் இளைஞர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த இ-சிகரெட் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கலிபோர்னியா மாகாணத்தின் அனஹெய்ம் நகரில் உள்ள தொலைக்காட்சி விற்பனை நிலையம் ஒன்றுக்கு இளைஞர் ஒருவர் தொலைக்காட்சி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த இ-சிகரெட் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது கைகளால் தீயை அணைத்தார். அதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.