லாரி மீது கார் மோதி விபத்து | 9 பேர் உயிரிழப்பு

102

சிலியில் சங்கிலி தொடர் போல நிகழ்ந்த சாலை விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் வால்டிவியா மாகாணத்தின் தலைநகர் வால்டிவியா மற்றும் மாபில் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இதில் 10 மாத பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் பயணம் செய்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் ஒரு லாரி மீது மோதியது.

இதனால் நிலைதடுமாறி எதிர் திசைக்கு சென்ற லாரி அந்த வழியாக வந்த வேன் மீது மோதியது. சங்கிலி தொடர் போல நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.