சிலி நாட்டின் வனப்பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயினால் அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.

139

தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள வனப்பகுதியில் அதிக காற்றின் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீ, மளமளவென அடுத்தடுத்த மரங்களுக்கும் பரவியது. சுமார் 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிற்கு கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் ஏராளமான மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து போராடி வருகின்றனர். பல மணி நேரமாக எரிந்து வரும் தீயை அணைக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது காட்டுத்தீ ஏற்பட்டுள்ள அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.