ஆஸ்திரேலியாவின் 30-வது பிரதமராக மோரிசன் தேர்வு..!

466

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்காட் மோரிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்-லை பதவி நீக்கம் செய்வது குறித்து லிபரல் கட்சி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தியது. இதில், டர்ன்புல் பெரும்பான்மை ஆதரவை இழந்தார். இதனால், லிபரல் கட்சியை சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப், நிதியமைச்சர் ஸ்காட் மோரிசன் ஆகியோரின் பெயர்கள் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் 30-வது பிரதமராக ஸ்காட் மோரிசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.