கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்க ரஷ்யாவிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்..!

258

கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும் வரை ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

சோவியத் யூனியன் என்ற அமைப்பு உடைந்து பல சிறிய நாடுகளாக பிளவுபட்ட பின்னர் 2014ம் ஆண்டு உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதனால் ரஷ்யாவிற்கு, அமெரிக்காவிற்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடையை விதித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், கிரிமியாவை தங்கள் நாட்டுடன் ரஷ்யா இணைத்து கொண்டதை அமெரிக்கா அங்கீகரிக்கவும் இல்லை, ஏற்றுக் கொள்ளவுமில்லை எனத் தெரிவித்தார். கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும் வரை ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை விலக்கி கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.