இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!

271

ஈரானில் இருந்து, எண்ணெய் இறக்குமதி செய்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஈரானில் இருந்து, எண்ணெய் இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில், அனைத்து நாடுகளும், நவம்பர் 4 ஆம் தேதிக்குள், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடு, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் பொருந்தும் என கூறியுள்ள அமெரிக்கா, தடையை மீறி செயல்படும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.