அமெரிக்காவின் 242வது சுதந்திர தினம்..!

228

அமெரிக்காவின் 242வது சுதந்திர தினத்தையொட்டி நிகழ்த்தப்பட்ட கண்கவர் வாண வேடிக்கையை ஆயிரக் கணக்கானோர் கண்டுக்களித்தனர்.

1776ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பிரிட்டனிடமிருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்யப்பட்டது. அன்று முதல் ஜூலை 4ஆம் தேதி தேசிய தினமாக அமெரிக்கா கொண்டாடி வருகிறது. இந்த தினத்தில் அளிக்கப்படும் பொது விடுமுறையின் போது, பொதுமக்கள் ஒன்று கூடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.

அதன்படி, 242வது சுதந்திர தினம் அமெரிக்கா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வெள்ளை மாளிகையில் கண்கவர் வாண வேடிக்கையுடன் சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மேலானியா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.