ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு..!

266

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹர் மாகாணத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்டு சென்ற பின்பு முக்காபெரட் சதுக்கத்தில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில் தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மற்றும் சீக்கியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.